1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By cauveri manickam
Last Modified: சனி, 21 அக்டோபர் 2017 (13:14 IST)

வெங்கைய்யா நாயுடுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை

துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடுக்கு திடீர் உடல்நலக்குறைவால் டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இதயம் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இதய நோயியல் பேராசிரியர் டாக்டர் பல்ராம் பார்கவா மேற்பார்வையில் அவருக்கு ஆஞ்சியோ கிராம் பரிசோதனை செய்தனர்.




இந்த சோதனையில், அவரது இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய் சுருங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவருக்கு ஸ்டென்ட்’ கருவி பொருத்தப்பட்டு ரத்தக்குழாய் சுருக்கம் சரி செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.  தற்போது நலமாக உள்ள அவர் இன்றோ அல்லது நாளையோ மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்று தெரிகிறது.