திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 29 ஏப்ரல் 2021 (07:43 IST)

18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு தடுப்பூசி: ஒரே நாளில் 1.32 கோடி பதிவு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று அதிகபட்சமாக 3.7 லட்சம் பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட வேண்டும் என்ற விழிப்புணர்வை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இதற்காக முன்பதிவும் நேற்று தொடங்கியது என்பதும், நேற்று முதல் நாள் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் இணையதளங்களில் முன்பதிவு செய்ய தொடங்கியதால் இணையதளம் சில மணி நேரங்கள் முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
தடுப்பூசி போட முதல் நாளிலேயே ஒரு கோடியே 32 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு தேதி இன்னும் ஒதுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட ஆன்லைனில் முன்பதிவு செய்தது வரவேற்கத்தக்கது என்று கூறப்பட்டு வருகிறது