வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2022 (19:45 IST)

ராகுல் காந்தி பயணத்தை நிறுத்த கொரோனா பரப்பப்படுகிறதா? முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு

rahul gandhi
ராகுல்காந்தியின் ஒற்றுமை பயணத்தை நிறுத்துவதற்காக வே இந்தியாவில் கொரோனா வைரஸ் பரப்பப்படுகின்றன என்ற சந்தேகம் இருப்பதாக முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
சீனாவில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதை அடுத்து இந்தியாவிலும் பரவலாம் என்ற நோக்கத்தில் இந்தியாவில் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இதுகுறித்து கூறிய ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கொரோனா  விதிமுறைகளை கடைபிடிக்க சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்துகிறார். மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற இந்த பயணத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசே கொரோனாவை பரப்புவது போல தெரிகிறது என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran