இந்தியாவில் ஒமிக்ரான்! உத்தர பிரதேசத்தில் 4 பயணிகளுக்கு ஒமிக்ரான் உறுதி!
உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ள ஒமிக்ரான் வைரஸின் பாதிப்பு உத்தர பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து வரும் நிலையில் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் வீரியமடைந்த மற்ற வகை கொரோனா வைரஸ்களும் பரவி வந்த நிலையில் சமீப காலமாக உலக நாடுகளில் கொரோனா குறைந்து வந்தது. இந்நிலையில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் மதுராவிற்கு சுற்றுலா வந்த 4 பயணிகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்களை சோதித்ததில் அவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் உறுதியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.