ஜவஹர்லால் நேரு ”அந்த” விஷயத்தில் வீக்.. பாஜக எம்எல்ஏ வின் சர்ச்சை பேச்சு
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு குறித்து உத்தர பிரதேச எம்.எல்.ஏ. விக்ரம் சிங் சைனி ஒரு சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர் நகரின் பாஜக எம்.எல்.ஏ. விக்ரம் சிங் சைனி, கடந்த செவ்வாய்கிழமை அன்று தனது வலைப்பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில் உலக நாடுகளின் தலைவர்கள், பங்கேற்ற ஒரு நிகழ்வில் மோடியை நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் பார்த்துகொண்டிருப்பதை குறிப்பிட்டு “ மோடி பாரத மாதாவின் வளர்ச்சியில் தான் கவனம் செலுத்துவார். அவர் அப்படி பார்க்காதே. அவர் ஒன்றும் நேரு அல்ல, அவர் மோடி” என்று குறிப்பிட்டிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இது குறித்து சைனியிடம் நிரூபர்கள் கேட்டபோது மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதாவது, நேரு ஒரு பெண் பித்தர், அவரின் குடும்பமே அப்படித்தான். அதனால் தான் ராஜீவ் காந்தி ஒரு இத்தாலிய பெண்ணை திருமணம் செய்தார்” என கூறியுள்ளார்.
இந்தியாவின் முதல் பிரதமர், ஜவஹர்லால் நேரு ஒரு பெண் பித்தர் என்று பாஜக எம்.எல்.ஏ கூறியதை குறித்து பலரும் கண்டித்து வருகின்றனர்.