வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2022 (09:25 IST)

இனி யூபிஐ பரிவர்த்தணைகளுக்கு இவ்ளோதான் லிமிட்!? – விரைவில் புதிய கட்டுப்பாடு?

Payment Apps
நாடு முழுவதும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில் அதற்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாட்டில் பணமதிப்பிழப்பிற்கு பிறகு ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் பெரிதும் ஊக்குவிக்கப்பட்டன. இதனால் தற்போது பேடிஎம், போன்பெ, ஜீ பே என பல யூபிஐ செயலிகளை பயன்படுத்தி மக்கள் பணபரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கேற்றார்போல் பெட்டி கடை தொடங்கி பெரிய கடைகள் வரை ஆன்லைன் பரிவர்த்தனைக்கான க்யூஆர் கோடு அட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் யூபிஐ மூலமாக மேற்கொள்ளும் பண பரிவர்த்தனைக்கு லிமிட் நிர்ணயிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தகவல்களின்படி, ஒரு நாளைக்கு யூபிஐ செயலிகள் வழியாக அதிகபட்சம் ரூ.1 லட்சம் அல்லது ஒரு நாளைக்கு 20 பரிவர்த்தனைகள் மட்டுமே மேற்கொள்ள முடியும் என புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Edit by Prasanth.K