வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 ஜனவரி 2025 (10:21 IST)

சரணடைந்த நக்சலைட்டுகள்! நக்சல் இல்லா மாநிலமானது கர்நாடகா! - துணை முதல்வர் அறிவிப்பு!

கர்நாடகாவில் முக்கியமான 6 நக்சலைட்டுகள் சரணடைந்த நிலையில் அம்மாநிலத்தை நக்சல்கள் இல்லா மாநிலமாக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.

 

 

கர்நாடகாவின் வனப்பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகமாக இருந்து வரும் நிலையில், அவர்கள் தாக்குதலால் பொதுமக்களும் பெரும் ஆபத்துகளில் சிக்கும் சம்பவங்களும் பல ஆண்டுகளாக தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக அரசு சமீப காலமாக நக்சல்பாரி இயக்கங்களை முடக்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

 

அவர்கள் சரணடைந்தால் அரசின் உதவிகள், கல்வி உள்ளிட்டவை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பலரும் தொடர்ந்து ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது முக்கியமான 6 நக்சலைட்டுகள் கர்நாடக போலீஸிடம் சரண் அடைந்துள்ளனர். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த வசந்த் என்பவரும் அடக்கம்.

 

அவர்கள் சரணடையும் முடிவை வரவேற்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவர்களுக்கு சட்ட புத்தகங்களை வழங்கியுள்ளார். மேலும் நக்சல்பாரிகள் சரணடைந்ததன் மூலம் கர்நாடகா நக்சல்கள் இல்லா மாநிலமாக மாறியுள்ளதை பெருமையுடன் அறிவிப்பதாக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K