Daily Horoscope
✕

டி.எஸ்.பியை கான்ஸ்டபிளாக பதவியிறக்கம் செய்த உபி முதல்வர்: என்ன காரணம்?

Written By Siva
Updated: புதன், 2 நவம்பர் 2022 (17:49 IST)
உத்தர பிரதேச மாநில முதல்வர் டிஎஸ்பியை கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவர் காவல்துறையில் பலாத்கார புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தன்னை காவல் ஆய்வாளர் ஒருவர் கும்பலுடன் பலாத்காரம் செய்ததாக தெரிவித்திருந்தார்
 
இந்த வழக்கை அப்போது டிஎஸ்பி ஆக இருந்த கிஷோர் என்பவர் விசாரணை செய்த நிலையில் அவர் அந்த புகார் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதுமட்டுமின்றி குற்றவாளிகளிடம் இருந்து இலஞ்சம் பெற்றதாகவும் கூறப்பட்டது
 
இதனை அடுத்து டிஎஸ்பி மீது வழக்கு பதிவு செய்த நிலையில் அவர் ஐந்து லட்ச ரூபாய் குற்றவாளிகளிடம் இருந்து லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியாகி வைரல் ஆனது
 
இதனை அடுத்து டிஎஸ்பி கிஷோரை கான்ஸ்டபிள் ஆக பதவி இறக்கம் செய்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுவரை இந்திய வரலாற்றில் டிஎஸ்பி ஒருவர் கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்யப்பட்ட இல்லை என்று கூறப்படுகிறது
 
Edited by Siva

எல்லாம் காட்டு

ஃபிளை துபாய் விமான விவகாரம்!. ஈரானுக்கு மட்டும் தொடர்பு இருந்தா!.. டிரம்ப் வார்னிங்!.

ஜனநாயகன்ல ஹீரோ.. ஆனா ஜனநாயகத்துக்கு வில்லன் விஜய்.. மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!...

ஜேசனும்.. சிக்மாவும்!.. போட்டோவை தூக்கி காட்டிய விஜய்!.. செம வைரல்!...

என்னை ஆந்திராவின் மகனாக கருதுங்கள்: சந்திரபாபு நாயுடுவுக்கு ஆனந்த் அம்பானி கோரிக்கை..

நடுவானில் ஃப்ளைதுபாய் விமானத்தில் நடந்த சம்பவம்.. பைலட் காப்பாற்றப்பட 6 வயது சிறுமி காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments