செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 23 மே 2022 (15:05 IST)

மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்: இரண்டு மாநிலங்கள் அறிவிப்பு!

work
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வொர்க் ப்ரம் ஹோம் என்ற நடைமுறை இருந்த நிலையில் தற்போது இரண்டு மாநிலங்களில் மீண்டும் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களில் இன்று காலை கனமழை பெய்தது. இதனால் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து அலுவலகம் செல்ல வேண்டியவர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது
 
 குறிப்பாக சூறைக்காற்று காரணமாக மரங்கள் சாலையில் விழுந்து கிடந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து அடுத்த அறிவிப்பு வரும் வரை ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன எ