புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 7 ஏப்ரல் 2021 (20:28 IST)

திருப்பதியில் ஏப்ரல் 12 முதல் இலவச தரிசனம் ரத்து: பக்தர்கள் அதிர்ச்சி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் 12 முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில் திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் இலவச தரிசனம் ஏப்ரல் 12 முதல் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
ஆனால் அதே நேரத்தில் 300 ரூபாய் டிக்கெட் தரிசனம் மட்டும் அனுமதிக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பக்தர்கள் மத்தியில் பாகுபாடு காட்டுவதாகவும் திருப்பதி தேவஸ்தானம் மீது அவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர் 
 
இருப்பினும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தான் இந்த அறிவிப்பு வெளியிட்டு இருப்பதாகவும் இதனை பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது