Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்கும் திருநங்கை

Updated: புதன், 16 மே 2018 (15:36 IST)
கேரள மாநிலத்தில் செவிலியரான திருநங்கை தற்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் தலைக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஸிஜி(51). திருநங்கையான இவர் நர்சிங் படிப்பை முடித்துவிட்டு சவுதி அரேபியாவில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
 
இந்நிலையில் விசாவை புதுப்பிக்காததால் சவுதி அரசு ஸிஜியை நாட்டை விட்டு வெளியேற்றியது. இதனையடுத்து ஸிஜி கேரளாவில் வேலை தேடி வந்தார். ஆனால் ஸிஜிக்கு எந்த மருத்துவமனையும் வாய்ப்பளிக்கவில்லை.
 
இதனால் அவரது குடும்பத்தினர் ஸிஜின்யை வெறுத்தனர். இதனால் மனமுடைந்த ஸிஜி திருச்சூர் கலெக்டரை சந்தித்து, தான் தற்கொலை செய்துகொள்ள அனுமதி அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
 
இதனையடுத்து அவரை சமாதானப்படுத்திய ஆட்சியர், அவருக்கு உதவுவதாக உறிதியளித்ததையடுத்து அவர் அங்கிருந்து சென்றார்.

எல்லாம் காட்டு

விமான நிலையத்தில் கொசு கடித்ததால் இறந்த 2 ஊழியர்கள்.. விசாரணைக்கு உத்தரவு...!

ஆர்.எஸ்.எஸ். பேரணியில் பங்கேற்ற 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்.. கல்வித்துறையின் அதிரடி நடவடிக்கை...

கனடாவில் உள்ள ஏரியின் பெயரை அமெரிக்கா என மாற்றிய டிரம்ப்.. பதிலடி கொடுத்த பிரதமர் மார்க் கார்னி..

நேபாளத்தை புரட்டிப்போட்ட வெள்ளம்!.. உயிரிழப்பு 400ஐ தாண்டியது!...

திமுக பத்தி எல்லாத்தையும் சொன்னா தாங்கமாட்டீங்க!.. சட்டசபையில் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments