புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (17:32 IST)

குழந்தைகளை தீவிரமாக தாக்கும் தக்காளி காய்ச்சல்

tomato virus
கடந்த2019 ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் கொரொனா  தொற்று  பரவிய நிலையில், தற்போது இதன் உருமாறிய 4 வது அலை பரவ வுள்ளதாக  கூறப்படுகிறது.

இந்த நிலையில். கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் பரவி வரும், தக்காளி கய்ச்சலுக்கு 5வயதுக்கு உட்பபட்ட குழந்தைகள்  பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடலில் சிவப்புக் கொப்பங்கள் ஏற்படுகிறது.

இதுவரை 80 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தக்காளி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தக்காளி வைரஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, உடலில் தீவிர காய்ச்சல், உடலில் தடிப்புகள், எரிச்சல்,கை மற்றும் கால்களில்  தோல் நிறமாற்றம், கொப்புளம்ங்கள்:, வாந்தி, வயிற்றுப்போக்கு, சளி, இருமல் ,தும்மல், உடல் வலி போன்ற அறிகுறிகள் தெரியும் என மா நில சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.