செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 செப்டம்பர் 2019 (15:06 IST)

ஸ்டிக்கர் ஒட்டு, இல்லைனா அபராதம் கட்டு!?: சுங்கச்சாவடி கட்டண முறையில் திடீர் மாற்றம்!

சுங்கச்சாவடிகளில் எத்ரிவரும் டிசம்பர் முதல் டிஜிட்டல் முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்ற புதிய நடைமுறை அமல்ப்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தமாக 522 சுங்கசாவடிகள் உள்ளன. நாள்தோறும் இந்த சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்க கட்டணங்கள் ரொக்கமாக வாங்கப்படுவதால் சில்லறை தட்டுபாடு, கால தாமதம் ஆகியவற்றால் வரி வசூலிக்கும் ஊழியர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே அடிக்கடி தகறாரு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

இந்த பிரச்சினைகளை தீர்க்க ஃபாஸ்டேக் எனப்படும் டிஜிட்டல் முரையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்கிற புதிய திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் டிசம்பர் முதல் அமல்படுத்துகிறது. இந்த ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை சுங்கசாவடிகளில் வாகனத்தின் உரிமத்தை காட்டி பெற்று கொள்ள வேண்டும். காரின் முகப்பு கண்ணாடியில் ஒட்டுமாறு இந்த ஸ்டிக்கர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்டேக் ஸ்டிக்கரில் கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணுக்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது பணபரிவர்த்தனை அப்ளிகேசன்கள் மூலமாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

இந்த டிஜிட்டல் முறைப்படி கார் டோல்கேட்டில் நுழையும்போது மேலே பொருத்தப்பட்டுள்ள டிடெக்டர் மூலம் கார் எண் மற்றும் ஃபாஸ்டேக் எண் ஆராய்ந்து உறுதிப்படுத்தப்படும். அதற்கு பிறகு வாகனத்திற்கான சுங்கசாவடி கட்டணம் தானாக ஃபாஸ்டேக் கணக்கிலிருந்து எடுத்து கொள்ளப்படும்.

டிசம்பருக்குள் இந்த ஃபாஸ்டேக் எண் மற்றும் ஸ்டிக்கரை வாங்க வேண்டும். இல்லையென்றால் ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு மட்டும் சுங்க கட்டணம் இருமடங்காக வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.