கேரளாவில் 20 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன் வரை 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து இன்று 13 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,161 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 17,862 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 155 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
மேலும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 24,965 என்றும் இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,394 என்றும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 1,43,500 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது