1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (19:44 IST)

கர்நாடகாவில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம்!

கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிப்படைந்துள்ளனர் என அம்மாநில அரசு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,346 என்றும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 60  என்றும் கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
மேலும் கர்நாடக மாநிலத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வரை எண்ணிக்கை 148,800  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 145,204 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பெங்களூரில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 6640 என்றும் பெங்களூரில் மட்டும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 14 என்றும் கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது