வெந்து தணிந்தது காடு… ஐந்து கெட்டப்களில் சிம்பு!
சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் ஐந்து வெவ்வேறு கெட்டப்களில் தோன்ற உள்ளாராம்.
நடிகர் சிம்பு தனது திரையுலக வாழ்க்கையின் இரண்டாம் இன்னிங்ஸில் இருக்கிறார். இதையடுத்து அவர் நடித்துள்ள மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது.. இந்நிலையில் அடுத்து அவர் நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.
சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இப்போது சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த மாதத்துக்குள் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டுவர தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் சிம்பு ஐந்து வெவ்வேறு விதமான தோற்றங்களில் தோன்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு செல்லும் சிம்பு அங்கு வெவ்வேறு காலகட்டங்களில் சந்திக்கும் வெவ்வேறு பிரச்சனைகளை பற்றியதே இந்த படம் என்று சொல்லப்படுகிறது.