செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (10:33 IST)

கொரோனாவால் அதிகரித்து வரும் உயிரிழப்பு.. இந்தியாவில் இன்றைய நிலவரம்..!

கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டிய நிலையில் நேற்று சுமார் 6000 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதை பார்த்தோம்.

மேலும் நேற்று கொரோனாவால் 16 பேர்கள் மட்டுமே உயிரிழந்த நிலையில் இன்று 24 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 6934 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது நாடு முழுவதும் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 63,380 ஆக உள்ளது என்றும் புதிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran