வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 23 மார்ச் 2018 (08:14 IST)

ராஜ்யசபாவின் 25 உறுப்பினர் பதவிகளுக்கு இன்று தேர்தல்

ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த நடிகை ரேகா,  கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட 58 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடைய உள்ள நிலையில்  அவற்றுக்கான தேர்தல் மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 10 மாநிலங்களை சேர்ந்த 33 உறுப்பினர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மீதியுள்ள 6 மாநிலங்களில் இருந்து 25 உறுப்பினர்களை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடைபெறுகிறது.

உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய ஆறு மாநிலங்களுக்கான ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்வு செய்ய இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன்பின்னர் மாலை 5 மணி அளவில் வாக்குகள் எண்ணப்பட்டு, இன்றே இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.