திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?
திருப்பதி லட்டுகள் தொடர்பான சர்ச்சை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விலங்கு கொழுப்பு கலந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பின்னணியில், கோயிலை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தயாரிக்கப்படும் பிரசித்தி பெற்ற லட்டுகள், தற்போது சர்ச்சையின் மையமாக இருக்கின்றன. இதில் விலங்குகளின் கொழுப்பு, குறிப்பாக மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் போன்றவை கலந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த தகவலை வெளியிட்டதைத் தொடர்ந்து, இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திருப்பதி கோயிலின் தூய்மையை உறுதி செய்வதற்காக 'சம்ரோஷணம்' எனப்படும் ஆன்மிக நிகழ்வு நடத்தபடவுள்ளதாக கோயில் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. விலங்கு கொழுப்பு கலந்ததாக கூறப்படும் நெய்யில் லட்டு தயாரித்ததனால் கோவிலுக்கு தோஷமும், பாவமும் ஏற்பட்டுள்ளதாக சில அர்ச்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சம்ரோஷணம் என்பது கோயிலை தூய்மைப்படுத்தும் சிறப்பு ஆன்மிக நிகழ்வு என சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விரைவில் குடமுழுக்கு நிகழ்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran