உண்டியலில் விழுந்த சில்லரைகளை உருக்க திருப்பதி தேவஸ்தனம் திட்டம்!
திருப்பதி உண்டியலில் காணிக்கையாக போடப்பட்ட சில்லரைகளை உருக்க திருப்பதி தேவஸ்தனம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் செலுத்தக்கூடிய உண்டியல் காணிக்கை மூலம் தினந்தோறும் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை வசூலாகிறது. இதில் சில்லரைகளும் அடக்கம்.
இதில், சில்லரை நாணயங்களின் 25 பைசாவிற்கு கீழுள்ள நாணயங்களை மாற்ற ரிசர்வ் வங்கி கால அவகாசம் வழங்கிய போது தேவஸ்தான அதிகாரிகள் அதனை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் தற்போது இந்த சில்லரைகளை மாற்ற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, இதனை உருக்குவதற்கு ரிசர்வ் வங்கியிடம் தேவஸ்தானம் அனுமதி கேட்டது. ரிசர்வ் வங்கி அனுமதி அளித்த நிலையில் குவிந்துள்ள 80 டன் நாணயங்களை உருக்க தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.