திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 31 ஜூலை 2024 (07:37 IST)

திருப்பதி கோவில் தெப்பக்குளம் மூடப்படுகிறதா? என்ன காரணம்? பக்தர்கள் அதிருப்தி..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தெப்பக்குளம் ஒரு மாதத்திற்கு மூடப்படுவதாகவும் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பக்தர்கள் குளிக்க அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர் என்பதும் குறிப்பாக கோவில் தெப்பக்குளத்தில் குளிப்பதை புண்ணியமாக கருதுகின்றனர் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா  அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகின்றனர். குறிப்பாக பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளில் திருப்பதி கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும் என்பதும் இந்த தீர்த்தவாரி முடிந்ததும் பக்தர்கள் குளத்தில் நீராடுவது வழக்கமான ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் நாளை முதல் அதாவது ஆகஸ்ட் 1 முதல் 31ஆம் தேதி வரை குளத்தை தூய்மைப்படுத்துதல் குளத்தில் உள்ள சேற்றை அகற்றும் பணிகள் மற்றும் குழாய்களுக்கு வண்ணம் பூசும் பணிகள் நடைபெற இருப்பதை அடுத்து ஒரு மாதத்திற்கு தெப்பக்குளம் மூடப்படுவதாகவும் பக்தர்கள் குளிக்க அனுமதி இல்லை என்றும் கூறியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்பால் திருப்பதி செல்லும் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Edited by Siva