திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: சனி, 20 ஜூலை 2024 (20:18 IST)

ஆடி மாத அற்புதங்கள்.. அம்மனை துதித்து மகிழ்வோம்..!

Aadi Velli
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்ற நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் என்பதும் பக்தர்கள் இடைவிடாமல் அம்மனை வழிபட வந்து கொண்டிருப்பார்கள் என்பதும் தெரிந்தது. 
 
ஆடி மாதத்தில் அம்மனுக்கு முளைப்பாரி எடுப்பது, கூழ் காய்ச்சுவது,  விரதம் இருப்பது உள்பட பல்வேறு நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செய்து வருகிறார்கள் என்பதும் ஆடி மாதம் என்பது அம்மனுக்கு தங்களது நன்றியை தெரிவிக்கும் மாதமாகவே நம் முன்னோர்கள் முதல் கொண்டாடி வருகின்றனர்.
 
ஆடி மாதத்தை பல தெய்வங்களுடன் தொடர்புபடுத்தி நம் முன்னோர்கள் பல்வேறு வித வழிபாடுகளை செய்து வந்தாலும் தமிழர்களுக்கு ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்று கூறப்படுகிறது.
 
ஆடி மாத பிறப்பு முதல் ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை என அனைத்து நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆடி முதல் தேதி தொடங்கி தை மாதம் மகரசாந்தி வரை பல்வேறு வழிபாடுகள் கொண்டாட்டங்கள் ஆகியவற்றில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது ஆண்டாண்டு காலமாக உள்ள வழக்கமாக உள்ளது. எனவே ஆடி மாதத்தில் அம்மனை துதித்து மகிழ்வோம்
 
Edited by Mahendran