’டிக் - டாக் ’மூலம் காணாமல் போன தந்தையை கண்டுபிடித்த மகன் !
’டிக் - டாக் ’மூலம் காணமல் போன தந்தையை கண்டுபிடித்த மகன் !
மக்கள், டிக் - டாக் சமூக வலைதள வீடியோ பதிவின் மூலம் ஆடல், பாடல்கள் பாடுவதிலும் நடிப்பிலும் தம் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், டிக் டாக் வீடியோ மூலம் காணாமல் போன தனது தந்தையை கண்டுபிடித்துள்ளார் ஒரு இளைஞர்.
ஆந்திரா மாநிலம் கர்நூல் மாவட்டம் நந்தியாலாவை சேர்ந்தவர் புல்லய்யா. இவர் தனது குடும்பத்தினருடன் சண்டை போட்டுக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினார்.
பின்னர், அவர் போன இடம்குறித்து யாருக்கும் தெரியவில்லை; அவரது மகன் நரசிம்மலு காணாமல் போன தனது தந்தையைக் குறித்து புகைப்படத்துடன் டிக்டாக்கில் ஒரு வீடியோ பதிவிட்டார்.
குஜராத்தில் இருந்த அந்த வீடியோவை பார்த்த புல்லய்யா, டிக் டாக் மூலம் தனது மகனுக்கு பதில் அளித்துள்ளார். அதனால் தனது தந்தையை வீட்டுக்கு அழைத்துவந்துள்ளார்.
சமீபத்தில் டிக் டாக் மூலம் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒரு நல்ல நிகழ்வு நடத்துள்ளது.