வியாழன், 7 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (09:22 IST)

ஆகஸ்ட் 15 சுதந்திரம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, இன்னும் சில நாடுகள்!!

ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா மட்டுமல்லாமல் மேலும் சில நாடுகள் சுதந்திரம் அடைந்துள்ளது.


இந்தியாவில் இன்று 76 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின சிறப்புரை ஆற்றினார்.

நாட்டின் 76வது சுதந்திர தினத்தை உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் என்பதும் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா மட்டுமல்லாமல் மேலும் சில நாடுகள் சுதந்திரம் அடைந்துள்ளது. அந்நாடுகளின் விவரம் பின்வருமாறு…  

லிச்சென்ஸ்டீன்:  ஆகஸ்ட் 15, 1940 ஆம் ஆண்டு லிச்சென்ஸ்டீன் நாடு ஜெர்மனியிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.

தெற்கு மற்றும் வட கொரியா: ஆகஸ்ட் 15, 1945-ல் கொரிய தீபகற்பகத்தில் ஜப்பானிய ஏகாதிபத்தியம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து வட கொரியா மற்றும் தென் கொரியா  1947 ஆம் ஆண்டு தங்களது சுதந்திர அரசை நிறுவியது.

காங்கோ:  ஆகஸ்ட் 15, 1960 ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசிடமிருந்து காங்கோ சுதந்திரம் பெற்றது.

பஹ்ரைன்: ஆகஸ்ட் 15, 1971 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பஹ்ரைன் விடுவிக்கப்பட்டது. ஆனால் டிசம்பர் 16 அன்று பஹ்ரைன் அதன் தேசிய தினத்தை கொண்டாடுகிறது.