காரில் தொங்கியபடி சென்ற இளைஞரால் பரபரப்பு
டெல்லி யூனியனில் கார் பேனட்டில் தொங்கியபடி சென்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று டெல்லியில் உள்ள ஆஷ்ராம் சவுக் பகுதியில் ஒரு காரில் தொங்கியபடி சென்ற வாலிபரை கண்டுபிடித்து விசாரித்தனர். அதற்கு அவர்'' தன் கார் மீது மற்றொரு கார் உரசியதாகவும், இதுபற்றி அந்தக் கார் ஓட்டுனரிடம் கேட்டதற்கு அவர் தன்னுடன் வாக்குவாதம் செய்வததாகவும், தான் வழிமறித்து நின்றபோது, அவர் காரை எடுத்துச் சென்றதாகவும், அதனால், கார் பேனட்டின் மீது விழுந்தாகவும் அந்த நபர் காரிலிருந்து என்னை இறக்கிவிடாமல் ஆஷ்ராம் சவுக்கில் இருந்து நிஜாமுதீன் தர்கா வரை சென்றதாகவும, இடையில் ஒரு காவலர் காரை நிறுத்தி தன்னைக் காப்பாற்றியதாக'' அவர் கூறியுள்ளார்.
அந்தக் கார் ஓட்டுனர் யார் என்று போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.