புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 10 ஜூலை 2019 (08:43 IST)

மக்களவையில் ராகுலுக்கு சீட் எங்கே – தொடங்கியது புதுச்சர்ச்சை !

மக்களவையில் ராகுல் காந்திக்கு முதல் வரிசையில் சீட் ஒதுக்கப்படாது என பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் காங்கிரஸ் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இதையடுத்து காங்கிரஸின் காரிய கமிட்டி கூடிய போது கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் நேரு குடும்பத்தில் இருந்து இல்லாமல் வேறு யாராவதாக இருக்க வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மக்களவையில் ராகுல்காந்திக்கு எதிர்க்கட்சிகளின் வரிசையில் முதல் வரிசையில் சீட் ஒதுக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் வரிசையில் காங்கிரஸின் சோனியா காந்திக்கும், காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுதரிக்கும் தலா ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ராகுல் காந்திக்கு இரண்டாம் வரிசையில் இடம் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் திமுக உட்பட மற்ற எதிர்க்கட்சிகளுக்கு முதல் வரிசையில் தலா ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.