புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 24 அக்டோபர் 2020 (17:48 IST)

தன்னிடம் தவறான நடந்த காவலரை நடுரோட்டில் வைத்து அடித்த பெண் ! வைரல் வீடியோ

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் சாலையோரம் நின்றிருந்த போக்குவரத்துக் காவலரை ஒரு பெண் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மஹாராஷ்டிர மாநில மும்பையில் உள்ள கல்பதா தேவி என்ற சாலையில் ஒரு பெண்ணை அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் தவறாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது.

இதனால் கோமடைந்த அப்பெண் போக்குவரத்துக் காவலரைத் தாக்கினார். பெண் இதில் காவலருக்கு சட்டை கிழிந்துவிட்டது.

அப்பெண்ணுடன் வந்த மற்றொரு பெண் இந்தக் காட்சியை தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை  சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் காவலரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.