வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 18 பிப்ரவரி 2019 (16:38 IST)

’புல்வாமா தாக்குதல் ’நடத்திய தீவிரவாதி 3 முறை ஒத்திகை பார்த்ததாக தகவல்...

காஷ்மீர் பகுதியில் உள்ள புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த தாக்குதலை நடத்திய ஜெய் இ முகமது பயங்கர  வாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலை நடத்தியவன் ஆதில் அகமதுதார்.காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இவனை அவ்வியக்கத்தின் தலைவர் மசூத் அசார் தேர்வு செய்திருந்தான்.

மேலும் குறுகிய காலத்திலேயே அசாரின் நம்பிக்கைக்கு பாத்திரமானான்.சில மாதங்களாகவே தற்கொலை தாக்குதலுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.இவனுடன் ஆப்கானிஸ்தனை சேர்ந்த 10 பேர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்

இதை நிகழ்த்திக் காட்ட கடந்த ஜனவரி மாதம் முதலாய் ஒருங்கிணைந்து திட்டம் தீட்டி வந்துள்ளனர்.இதற்காக குண்டுகளை காரில் பொருத்தி 3 முறை ஒத்திகை பார்த்ததாகவும் தெரியவந்துள்ளது.ஒத்திகை பார்த்ததன் அடிபடையில் தான் அவன் தற்கொலை தாக்குதல் நடத்தியது  தெரியவந்துள்ளது.