புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை

Last Modified திங்கள், 18 பிப்ரவரி 2019 (14:30 IST)
இந்திய பாதுகாப்பு படையினர் 44 பேர் புல்வாமாவில் தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி கம்ரான் மற்றும் அவனது கூட்டாளி காலி ரஷித் ஆகியோர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் செய்திகள் வெளிவந்துள்ளது
காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படை இன்று நடத்திய அதிரடி தாக்குதலில் கம்ரான் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் நான்கு வீரர்கள் பலியானதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

இன்று நடைபெற்ற சுமார் 4 மணி நேர துப்பாக்கி சண்டையில் காலி ரஷீத், கம்ரான் என்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி காலி ரஷி , நேட்டோ படைகளால் தேடப்படுபவன் என்றும் கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :