ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 14 மே 2020 (19:31 IST)

வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்? புதிய தகவல்கள்

புதிய தகவல்கள்
மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் இருக்கும் நிலையில் வெளிநாட்டில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாய்நாட்டுக்கு கொண்டுவர சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது
 
வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னர் அதில் நெகட்டிவ் உள்ளவர்களுக்கு மட்டும் உடனடியாக ஏழு நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்த படுவார்கள். ஏழு நாட்களுக்குப் பின் எட்டாவது நாளில் பாசிட்டிவ் இருந்தால் உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுவார்கள். ஒருவேளை எட்டாவது நாளிலும் நெகட்டிவ் இருந்தால் அவர்கள் தங்களுடைய வீடுகளில் 14 நாட்கள் தனிமைபப்டுத்த அறிவுறுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர். 
 
இந்த நிலையில் விமான நிலையத்தில் செய்யப்படும் பரிசோதனையில் ஒருவேளை பாசிட்டிவ் இருந்தால் மருத்துவமனையில் உடனடியாக தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்கள்