1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today 467 affected by corona in Tamil Nadu

தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா பாதிப்பு: கடந்த 10 நாட்களில் இதுதான் குறைவு

கொரோனா
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட தகவலின்படி இன்று தமிழகத்தில் 447 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9674ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 447 பேர்களில் சென்னையில் மட்டும் 363 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5625ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது என்பதும், தமிழகத்தில் இன்று மட்டும் 11,956 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்க தெரிவித்துள்ளார்.
 
மேலும் தமிழகத்தில் இன்று 64 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 2240 பேர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
உணவு, வாடகை... ஏழைகளுக்கான திட்டங்களை விவரிக்கும் நிர்மலா சீதாராமன்!