1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (14:22 IST)

8 ஆம் வகுப்பு மாணவியின் ஆடையை அவிழ்த்து கொடுமைபடுத்திய ஆசிரியர்

உத்தரப் பிரதேச பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை சீருடைக்கு அளவு எடுப்பதாகக் கூறி  நிர்வாணப்படுத்திய ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பள்ளி மாணவிகள் மீதான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இது போன்ற பாலியல் தொல்லைகள் நடைபெற்று வருகிறது.
 
உத்தரப்பிரதேசம் கனூஜ் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர்  8-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவியை, அவரது ஆசிரியர் துணிக்கு அளவெடுக்க வேண்டும் என கூறி மாணவியின் துணிகளை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் ஆசிரியர் இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என மாணவியை எச்சரித்திருக்கிறார். வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்தவற்றை பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.
 
இதனையடுத்து ஆத்திரமடைந்த பெற்றோர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். புகாரின் பேரில் பள்ளிக்கு சென்ற காவல் துறையினர் சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.