திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 14 பிப்ரவரி 2018 (14:45 IST)

டாஸ் போட்டு ஆசிரியரை தேர்வு செய்த பஞ்சாப் மாநில அமைச்சர்

கல்லூரி ஆசிரியரின் பணியிடத்தை டாஸ் போட்டு தேர்வு செய்தார் பஞ்சாப் மாநில அமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி.
பஞ்சாபில் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் பணிக்கு 37பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் கல்லூரியில் ஒரே ஒருகாலியிடம் தான் இருந்தது. 
 
இந்நிலையில் அந்தக் கல்லூரியில் வேலை செய்ய இருவர் விருப்பம் தெரிவித்தனர். அதனால் சரண்ஜித் சிங் சன்னி ஒருவரை தேர்ந்தெடுக்க, நாணயத்தைச் சுண்டிவிட்டுப் பூவா தலையா என்கிற முறையில் முடிவெடுத்துள்ளார்.
 
இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்சயை ஏற்படுத்தியுள்ளது.