1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 19 பிப்ரவரி 2018 (16:17 IST)

8ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த ஆசிரியர் தலைமறைவு

கடந்த சில வருடங்களாகவே ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஒரு பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு காதல் கடிதம் கொடுத்ததாக ஆசிரியர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
கள்ளக்குறிச்சி அருகே உள்ள மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் பள்ளியில், 8-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு காதல் கடிதம் ஒன்றினை அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் நிர்மல் என்பவர் கொடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
 
காவல்துறையினர் அந்த கடிதத்தை வைத்து விசாரணை செய்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென ஆசிரியர் நிர்மல் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆசிரியர் நிர்மலின் காதல் கடிதத்தை கொடுக்க உதவியதாக 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சின்னசேலம் போலீசார் தெரிவித்துள்ளனர். விரைவில் ஆசிரியர் நிர்மல் பிடிபடுவார் என்றும் அவரிடம் விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.