திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (16:37 IST)

'மதரஸா கல்வி வாரியச் சட்டம்' செல்லாது என்ற அலகாமாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் தடை

'மதரஸா கல்வி வாரியச் சட்டம் ’செல்லாது என்ற அலகாமாத்  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்கு மதரஸா பள்ளிகள் சட்டம்- 2004 செல்லாது என்று சமீபத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
 
மதரஸா பள்ளிகள் சட்டம் இந்திய மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக உள்ளதாக  உயர் நீதிமன்றம் கூறியிருந்ததுடன், மதரஸா பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யவும் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில்,  இவ்வழக்கில் ’மதரஸா கல்வி வாரியச் சட்டம் ’செல்லாது என்ற அலகாமாத்  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
 
இதில், மதரஸா சட்டத்தை உயர் நீதிமன்றம் தவறாக புரிந்துகொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. மதரஸா சட்டம் மதக் கல்வி கற்பிப்பது தொடர்பான விதிமுறைகளை வகுக்கவில்லை. மதரசாக்களை ஒழுங்குபடுத்துவதே மதரசா கல்வி வாரியச் சட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்துள்ளது.
 
மேலும், மதரஸாக்களை ஒழுங்குப்படுத்த உத்தரவு பிறப்பிக்கலாம். அதற்காக மதரஸாக்கள் சட்டத்தையே ரத்து செய்து செல்லாது என தீர்ப்பளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.