திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2023 (16:43 IST)

தேனிலவின்போது மாப்பிள்ளை திடீர் உயிரிழப்பு! அதிர்ச்சியில் மனைவி!

மகாராஷ்டிராவில் தேனிலவுக்கு சென்ற புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் முகமது காசிப் இம்தியாஸ் என்ற 23 வயது இளைஞர். இவருக்கு சமீபத்தில்தான் இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. அதையடுத்து இருவரும் தேனிலவிற்காக மாதேரனுக்கு சென்றுள்ளனர். இவர்களோடு மற்றொரு தம்பதியும் தேனிலவு சென்றுள்ளனர்.

மாதேரனில் பல பகுதிகளையும் சுற்றி பார்த்த அவர்கள் குதிரை சவாரி செய்ய விரும்பியுள்ளனர். இதற்காக குதிரைகளில் அவர்கள் ஏறி அமர்ந்த நிலையில், முகமது காஷ்யப் சென்ற குதிரை வேகமாக ஓடியுள்ளது. இதில் நிலைதடுமாறிய காஷ்யப் தவறி பின்பக்கமாக விழுந்துள்ளார்.


இதை கண்டு மற்றவர்கள் பதறி ஓடிவந்து அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனை சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தேனிலவுக்கு சென்ற இடத்தில் புது மாப்பிள்ளை இறந்த நிலையில் அதை கண்டு அவரது இளம் மனைவி கதறி அழுத சம்பவம் பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

குதிரை சவாரி செய்ய விரும்புபவர்கள் அதற்குரிய தலைக்கசவம் போன்றவற்றை அணிந்து சென்றால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கலாம் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Edit by Prasanth.K