1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2024 (17:47 IST)

பிறந்தநாளை வீடியோ எடுக்க வந்த நபர் கொலை!

camera shooting
பீகார் மாநிலத்தில்  பிறந்த நாள் நிகழ்ச்சியை வீடியோ எடுக்க வந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள தர்பங்கா  மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகேஷ்.  இவர், தன் மகளின் பிறந்த நாளை கொண்டாட முடிவெடித்து, இந்த நிகழ்ச்சிக்காக  வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க சுஷில்குமாரை அழைத்திருக்கிறார்.
 
இந்த நிகழ்ச்சியை முழுமையாக அவர் வீடியோ எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
 
இதில் ஆத்திரமடைந்த  ராகேஷ், சுஷில்குமாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிகழ்ச்சி  நடந்துகொண்டிருக்கும்போது, பேட்டரி தீர்ந்ததால் தற்காலிகமாக  வீடியோ எடுப்பதை  சுஷில் குமார் நிறுத்தியுள்ளார். இந்த நிலையில், அவரை கொலை செய்த ராகேஷ் மீது சுஷிலின் தந்தை அளித்த புகாரின்படி, தலைமறைவாக உள்ள சுஷிலை போலீஸார் தேடி வருகின்றனர்.