வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 15 ஜூலை 2019 (14:37 IST)

நவீன மாடல் பள்ளியில் பேய் ? விடுதியை காலி செய்த மாணவிகள் ! பரபரப்பு சம்பவம்

ஆந்திர மாநிலத்தில் நவீன மாடல் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு மாணவிகள் அதிகம் பேர் தங்கியுள்ளனர். இந்நிலையில் இங்கு பேய் உள்ளதாக யாரோ... கிளப்பிவிட தற்போது மாணவிகள் இவ்விடுதியைக் காலி செய்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் கல்வியை மேம்படுத்தும் வகையில், கர்னூல் மாவட்டத்தில் உள்ள பெகேல் எனும் இடத்தில்  புதிய நவீன மாடல் பள்ளிகளை மாநில அரசு தொடங்கி நடத்திவருகிறது.
 
இந்த நவீன பள்ளியில் சேருபவர்கள் கட்டாயம் இங்குள்ள விடுதில் தங்கித்தான் படிக்க வேண்டும். பிளஸ் 2 வரை வகுப்புகள் உள்ளன. மொத்தம் இங்கு 100 பேர் படித்து வருகின்றனர். இந்ந்நிலையில் இங்கு அடிக்கடி பயமுறுத்தும் சப்தம் வருவதாக மாணவிகள் பயந்துள்ளனர்.
 
இதில் இரவு நேரத்தில் மிகவும் பயந்த மாணவி, அடுத்த நாள் தன் பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் வந்து மாணவியை வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். அதேபோல் சில மாணவிகள் விடுதியை காலி செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த பள்ளி முதல்வர் பெற்றோரை சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டனர்.ஆனால் அதை ஏற்காமல் அனைத்து மாணவிகளும் சென்று விட்டதாகத் தெரிகிறது. தற்போது பள்ளி கல்வித்துறை செயலாளர் விழிப்புணர்வை ஏற்படுத்து வருகின்றனர்.