வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth.K
Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (09:08 IST)

பூமியை சுத்தி முடிச்சாச்சு.. நிலவை சுற்ற கிளம்பியாச்சு! – சந்திரயான் 3 அப்டேட்!

ISRO
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் பூமியை பல சுற்றுகள் சுற்றி அதிலிருந்து தற்போது நிலவை நோக்கிய பயணத்தை புறப்பட உள்ளது.



இஸ்ரோவின் நிலவு ஆராய்ச்சி திட்டமான சந்திரயான் திட்டன்படி சந்திரயான் 3 விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக கடைசி நொடியில் தரையிறங்கும்போது சந்திரயான் 2 தொடர்பை இழந்து தோல்வியை அடைந்தது. சந்திரயான் 2வில் இருந்த பிரச்சினைகளை சரிசெய்து வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க செய்யும் வகையில் சந்திரயான் 3 உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஜூலை 14ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 பூமியை தொடர்ந்து 5 முறை சுற்றி தனது சுற்றுவட்ட பாதையை விரிவாக்கி நிலவை நோக்கி நகர்ந்து வருகிறது. 5 முறை பூமியை சுற்றும் திட்டத்தை வெற்றிகரமாக சந்திரயான் 3 முடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதையடுத்து சந்திரயான் 3 விண்கலம் புவிவட்ட பாதையிலிருந்து நிலவை நோக்கி வெற்றிகரமாக நகர்கிறது.

பின்னர் நிலவை சுற்றிக் கொண்டே தனது சுற்று வட்ட பாதையை குறைத்து நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. கணக்கீட்டின்படி ஆகஸ்டு 5ம் தேதி இந்த தரையிறக்கம் நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K