அசாமில் வெள்ளப்பெருக்கு; நிலச்சரிவு! – உதவிகரம் நீட்டிய தலாய்லாமா!
அசாமில் கடந்த வாரம் முதலாக கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தலாய்லாமா நிதி உதவி செய்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அசாமில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தலாய்லாமா ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். மேலும் அசாமில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் உயிரிழந்த மக்களுக்காக தன் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்வதாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.