திடீரென மாயமான எம்.எல்.ஏக்கள்: உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்கிறதா?
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் எம்எல்ஏ கூட்டம் நடந்தபோது அதில் இருபதுக்கும் குறைவான எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பதும் மீதி எம்எல்ஏக்கள் திடீரென மாயமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
உத்தவ் தாக்கரே மீது அதிருப்தி அடைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்திற்கு வரவில்லை என்றும் குறிப்பாக உத்தவ் தாக்கரேயின் நடவடிக்கைகள் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் பெரும்பாலான சிவசேனா கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் சிவசேனா கட்சியின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் ஆட்சி மாற்றம் நடைபெறுமா? பாஜக ஆட்சியைப் பிடிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்