ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2019 (08:09 IST)

போக்குவரத்து ஊழியர்களுக்கு இந்த மாதம் ஊதியம் கிடையாது: அதிர்ச்சி அறிவிப்பு

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருவதால் இந்த மாதம் போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் போட பணம் இல்லை என தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. ஊழியர்களின் செப்டம்பர் மாத ஊதியத்திற்கு 224 கோடி ரூபாய் தேவை என்ற நிலையில், 7 கோடியே 50 லட்சம் ரூபாய் மட்டுமே கையிருப்பு உள்ளதால் ஊதியம் வழங்க முடியாது என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
 
தெலுங்கானா மாநில போக்குவரத்து ஊழியர்கள் கடந்த சில நாட்களாக அரசு ஊழியராக அறிவித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நிராகரித்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 48 ஆயிரம் ஊழியர்களை அவர் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த வேலைநிறுத்தம் குறித்த வழக்கு தெலுங்கானா ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தசரா பண்டிகை சமயத்தில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்துக் கழகத்திற்கு 125 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது