வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (11:36 IST)

ராகுல் காந்தி ஒரு காகித புலி.. யார் என்ன எழுதி கொடுத்தாலும் படிப்பார். கவிதா

ராகுல் காந்தி ஒரு காகிதப் புலி என்றும் அவர் யார் என்ன எழுதி கொடுத்தார்களோ,  அதை படிப்பார் என்றும் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கவிதா பேசினார்.  ராகுல் காந்தி சிங்கம் அல்ல, அவர் ஒரு காகிதப் புலி.  யார் என்ன எழுதிக் கொடுத்தாலும் அதை அப்படியே படித்துவிட்டு போவார்.

உள்ளூரில் என்ன சூழ்நிலை இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்வதில்லை. அடுத்த முறை தெலுங்கானா வந்தால் தோசை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு மக்களிடம் பேசி பழகி அவர்களுக்கு என்ன பிரச்சனை இருப்பது இருக்கிறது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்

Edited by Siva