1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (14:34 IST)

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன்: அண்டை மாநில முதல்வர் அறிவிப்பு!

Niti Ayog
டெல்லியில் நாளை நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற இருக்கும் நிலையில் பல மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர் 
 
தமிழகத்திலிருந்து தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரதமரிடம் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகரராவ் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார் 
 
மாநில அரசுகளுக்கு மதிப்பளிக்காமல் நடத்தும் இந்த நிதி ஆயோக் கூட்டம் தேவை இல்லாதது என்றும் இந்த கூட்டத்தில் நான் கலந்து கொள்வதால் தெலுங்கானா மாநிலத்துக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்