செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (11:29 IST)

வளர்த்தவரையே காவு வாங்கிய சேவல்! – சேவல் சண்டையில் விபரீதம்!

தெலுங்கானாவில் சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்பட்ட சேவல் சண்டையில் சேவல் தாக்கியதில் அதன் உரிமையாளரே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சேவல் சண்டை, கிடா சண்டை போன்ற சில போட்டிகள் சட்டரீதியாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அவ்வபோது மறைமுகமாக இதுபோன்ற பந்தயங்கள் சில இடங்களில் அடிக்கடி நடந்து வருகின்றன.

தெலுங்கானாவின் கரீம் நகர் மாவட்டத்திலுள்ள லோத்தனூர் என்னும் கிராமத்தில் சேவல்களின் கால்களில் கத்தியை கட்டி சேவல் பந்தயம் நடத்தியுள்ளனர். அப்போது சேவல் ஒன்று தப்பிக்க பின் வாங்கியபோது உரிமையாளரின் இடுப்பு பகுதியில் தாக்கியதில் அவருக்கு ரத்தபோக்கு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் முறைகேடாக சேவல் சண்டை நடத்திய 16க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.