ஞாயிறு, 25 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (18:43 IST)

சட்டக் கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர்கள் !

kidnap
ஆந்திர மாநிலத்தில் சட்டக் கல்லூரி மாணவி ஒருவரை காரில் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 ஆ ந்திர மா நிலம் திருப்பதியில்  சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில்  கர்னூல் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி(24) இறுதியாண்டு படித்து வருகிறார்.

நேற்று மாலை கல்லூரி முடிந்த பின், பேருந்திற்காக  தாமனேஸி பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தார்.

அப்போது, காரில் வந்த 2 வாலிபர்கள் மாணவியை பலவந்தமாக காரில் கடத்திச் சென்றனர்.

உடனே அருகில் இருந்த மக்கள் போலீஸாருக்கு இதுகுறித்துத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸார் காரை மடக்கி பிடித்து,  மாணவியை கர்னூலுக்குக் கடத்திச் சென்ற வாலிபர்களைப் பிடித்து விசாரித்தனர்.

அதில், மாணவியின் சித்தப்பா மகன் ஒருவர் தன் நண்பருடன் சேர்ந்து மாணவியை கடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.