திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (19:27 IST)

வெளிநாடுகளிலிருந்து கேரளாவுக்கு வரும் வெள்ள நிவாரண பொருட்களுக்கு வரி விலக்கு

கேரள மாநிலத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் வெள்ள நிவாரண பொருட்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி மற்றும் அடிப்படை சுங்க வரி ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

 
மழை வெள்ளத்தால் பாதித்த கேரள மாநிலத்துக்கு பிற நாடுகளில் இருந்து வெள்ள நிவாரண நிதி மற்றும் பொருட்கள் வழங்கப்படு வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் வெள்ள நிவாரண பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் கேரள அரசு கோரிக்கை விடுத்து இருந்தது. இதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. 
 
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
 
இதுபோன்ற ஒரு தருணத்தில் இந்தியா முழுவதும் கேரளாவுக்கு ஆதரவாக நிற்கிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் வெள்ள நிவாரண பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரி மற்றும் ஒருகிணைந்த ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.