வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 ஜூன் 2022 (08:41 IST)

அடிக்கும் வெயிலை அடக்கும் மழை..! – 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!

தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடைகாலம் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை எட்டியுள்ளது. எனினும் அவ்வபோது பெய்யும் மழையால் வெயிலின் தாக்கம் சில மாவட்டங்களில் குறைந்து வருகிறது.

நேற்று டெல்டா பகுதிகளான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம் பகுதிகளில் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இன்று வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், கரூர், வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.