எனது போனை ஒட்டுக்கேட்கிறார்கள்: ஆளுனரின் அதிர்ச்சி புகார்
எனது போனை ஒட்டு கேட்கிறார்கள் என தெலுங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது வங்
தெலுங்கானா மாநில ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவுடன் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது செல்போன் ஒட்டுக் கேட்கப்படுவதாக தனக்கு சந்தேகம் உள்ளது என தமிழிசை சௌந்தராஜன் புகார் தெரிவித்துள்ளார்
தனது முன்னாள் உதவியாளர் தீபாவளி வாழ்த்து கூறியதிலிருந்து தனது செல்போன் ஒட்டு கேட்கப்படுவதாக சந்தேகம் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்
தெலுங்கானாவில் ஆளுநருக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்றும் ஜனநாயகமற்ற சூழல் நிலவுகிறது என்றும் ஏற்கனவே ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில் தற்போது தனது போன் ஒட்டுக் கேட்கப்படுவதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Edited by Siva