ஞாயிறு, 9 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : ஞாயிறு, 11 செப்டம்பர் 2016 (11:14 IST)

கன்னடர்களுக்கு எதிரான கருத்து ; தமிழ் இளைஞருக்கு சராமரி அடி உதை : அதிர்ச்சி வீடியோ

கன்னடர்களுக்கு எதிரான கருத்து ; தமிழ் இளைஞருக்கு சராமரி அடி உதை : அதிர்ச்சி வீடியோ

காவிரி நீர் விவகாரத்தில் கன்னட நடிகர்களை, தமிழ் நடிகர்களோடு ஒப்பிட்டு முகநூலில் கருத்து தெரிவித்த தமிழ் இளைஞர் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.


 

 
தமிழகத்திற்கு காவிரி நீரை, கர்நாடக அரசு திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பல்வேறு கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா உருவ படத்தை எரித்தும் அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். சமீபத்தில் கன்னட சினிமா நடிகர், நடிகைகள் ஒன்றாக கூடி பேரணி நடத்தி தங்கள் எதிர்ப்பை காட்டினர்.
 
தற்போது அது தனிமனித தாக்குதல்களாகவும் மாறியுள்ளது. கர்நாடகாவில் தமிழர்கள் குறி வைத்து தாக்கப்படுவதாக பல்வேறு அதிர்ச்சியான செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில், கன்னட நடிகர்களையும், தமிழ் சினிமா நடிகர்களையும் ஒப்பிட்டு, பெங்களூரில் வசிக்கும் சந்தோஷ் என்ற தமிழ் இளைஞர் முகநூலில் கருத்து தெரிவித்திருந்தார்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த கன்னட அமைப்பினர் சிலர், அவரை கன்னத்தில் பலமுறை அடித்ததோடு, அவரை மண்டியிடச் செய்து மன்னிப்பும் கேட்க வைத்துள்ளனர். 
 
இது தொடர்பாக, சந்தோஷ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கன்னட போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
அந்த அதிர்ச்சி வீடியோ உங்கள் பார்வைக்கு...